வகுப்பறைக்குள் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர் கைது...!

நமது நிருபர்

பாடசாலை கடமை நேரத்தின் போது ஆசிரியர்கள் இருவர் கஞ்சா புதைத்துக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. 

சந்தேக நபர்கள் வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post