எம்.ஏ.ஏ.காசிம்
கருவலகஸ்வெவ தேவநுவர கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு தேவநுவர கிராமத்திள் புகுந்த காட்டு யானையின் தாக்குதலில் 78 வயதான டபிள்யூ. நிக்கோலஸ் பெரேரா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டை விட்டு வெளிக்கடமைக்குச் செல்லும் போது வெளியே நின்ற காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், பின்னர் உறவினர்களினால் அவரின் சடலத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருவலகஸ்வெவ திடீர் மரண விசாரனையின் அதிகாரியின் விசாரனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
