மரம் முறிந்து வீழ்ந்ததில் புத்தளம் - கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிப்பு

ரிபாக்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகந்தலுவ தபால் நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால், சில மணித்தியாலங்கள் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டது.

குறித்த மரம் விழுந்ததில் மின்சார இணைப்பு மற்றும் தொலைபேசி இணைப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததன.

மேலும், மரம் முறிந்து வீழ்ந்ததில் அந்த வீதியால் பயணித்த லொறியொன்றும் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சில மணித்தியாலங்களின் பின்னர் வீதியில் முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டதாகவும் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

படங்கள் எம்.ஏ.ஏ.காசிம்



Post a Comment

Previous Post Next Post