சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

 

ரஸீன் ரஸ்மின்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சி.டி.களுஆராச்சி, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பத்தரமுல்லை -  செத்சிரிபாயவில் அமைந்துள்ள சமுரத்தி அபிவிருத்தி திணைக்களத்தில் இன்று (02) காலை சமய நிகழ்வுகளின் பின்னர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா உட்பட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், கிராம சக்தி திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் (சமூக அபிவிருத்தி) கடமையாற்றினார்.

மேலும் , மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரின் மேலதிக செயலாளராகவும் கடமைபுரிந்த இவர், நிர்வாகப் பணிகளில் நீண்ட காலம் அனுபவம் கூடிய ஒருவராகவும் காணப்படுகிறார்.

களுபோவில மகா வித்தியாலயம், வத்தேகம மத்தும பண்டார மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு நாலந்தா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், கொழும்பு மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post