கற்பிட்டியில் 477 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு...!

ரிபாக்

கற்பிட்டி - இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 477 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிரதேசத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விஜய கடற்படையினர் நேற்று விஷேட கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உரைப் பைகள் மிதந்துகொண்டிருப்பதை அவதானித்த கடற்படையினர், குறித்த உரைப் பைகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி இலைகள் அடங்கிய 14 மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கையின் பல இடங்களுக்கு விநியோகிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட குறித்த பீடி இலைகள் அடங்கிய மூடைகளை சந்தேக நபர்கள், கரையோர பகுதிக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அதனை கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post