SKY தமிழ் இணையத்தின் புதிய செய்தி முகாமையாளராக சப்றாஸ் நியமனம்

சாஹிப்

ஸ்கை தமிழ் செய்தி பிரிவின் புதிய செய்தி முகாமையாளராக கற்பிட்டி நுரைச்சோலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் தேசகீர்த்தி முஹம்மது ரஸின் சப்ராஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

இதுவரை காலமும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் செய்தி முகாமையாளராக கடமையாற்றி வந்தவர் பதவி விலகியதை அடுத்து, புதிய முகாமையாளராக ஊடகவியலாளர் தேசகீர்த்தி முஹம்மது ரஸின் சப்றாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்கெடுப்பு நடாத்தப்பட்டும் நிர்வாக குழுவின் தெரிவின் ஊடாகவும் குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினரான இவர், இதற்கு முன்னர் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் செய்தி ஆசிரியராகவும், Importmirror,  RJS தமிழ், உள்ளிட்ட இணையத்தளங்களின் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post