முஹம்மட் ரிபாக்
புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ்.எச்.தமீம் அன்ஸார் நியமிக்கப்பட்டுள்ளார்.பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் மு.ம.வித்தியாலயத்தின் அதிபராக கடமைபுரிந்து வந்த எம்.எச்.எம். ராசிக், இன்று (27) முதல் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு அப்பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அதிபர் எஸ்.எச்.தமீம் அன்ஸார், புத்தளம் தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலம், பகடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் குருநாகல் சியம்பலாகஸ்கொடுவ தேசிய பாடசாலை, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார்.
1990.01.01 ஆம் திகதி முதல் இஸ்லாம் பாட ஆசிரியர் நியமத்தை பெற்ற இவர், புத்தளம் தெற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட சமீரகம முஸ்லிம் வித்தியாலயம், கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயம், கொத்தாந்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமை புரிந்துள்ளார்.
கடந்த 2011.10.06 ஆம் திகதி பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் இணைந்து கொண்ட இவர், அதிபராக கடமைகளை பொறுப்பேற்கும் வரை அப்பாடசாலையின் பிரதி அதிபராக கடமை புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

