- ரிபாக் -
புத்தளம் - பல்லம பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் பொதுமக்களின் பாவனைக்காக வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த பெரேரா, புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு புதிதாக திறக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் அனுபவமிக்க வைத்தியர்கள் குழுவினர் மூலம் இலவசமாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்ந பெரேரா தெரிவித்தார்.
மேலும், புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பொது மக்களின் சுகாதார தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.




