புதையல் தோண்டிய நான்கு பேருக்கு விளக்கமறியல்

சாஹிப்

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவநுவர பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் நான்கு பேரை கைது செய்தனர்.

மேலும், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பெகோ இயந்திரம் உள்ளிட்ட ஏனைய பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக  கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post