ரிபாக்
புத்தளம் - உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு ஒன்று இன்று (10) நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) விடுத்த வேண்டுகோளுக்கிணங்க வை.டபிள்யூ. எம்.ஏ ( YWMA) Sri Lanka அமைப்பின் அணுசரணையில் இந்த இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவி பணிப்பாளர் அலா அஹமட், சமூக சேவையாளரும் ,வை.டபிள்யூ. எம்.ஏ ( YWMA) Sri Lanka அமைப்பின் இணைப்பாளருமான முஜாஹித் நிசார், SDEC செயலாளர் ஏ.சி.எம்.பைசல் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கில் 83 மாணவர்கள் கலந்துகொண்டதுடன், ஆசிரியர் இப்ராஹிம் ரனூஸ் வளவாளராக கலந்துகொண்டார்.