மன்னாரில் 2 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மன்னார் பிரிவுக்குப் பொறுப்பான ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் - தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை மன்னார் பிரிவுக்குப் பொறுப்பான மோசடி ஒழிப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரிடம் சில போதை மாத்திரைகள் காணப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இளைஞனிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, இந்த பகுதியிலுள்ள தரிசு நிலமொன்றில் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் சில போதை மாத்திரைகளை கைப்பற்றிள்ளனர்.
மேலும், சந்தேக நபருக்கு போதை மாத்திரைகளை விநியோகிப்பதற்காக கொண்டு வந்து வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளையும் மன்னார் பிரிவுக்குப் பொறுப்பான ஊழல் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
(ரிபாக்)