போர்ச்சுக்ஸ் நாட்டைச் சேர்ந்த நாய் ஒன்று 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
Rafeiro Do Allentejo என்ற இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14 வயது வரை மட்டுமே வாழக் கூடியது என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அதே இனத்தைச் சேர்ந்த போபி எனும் இந்த நாய் 30 ஆண்டுக்களை கடந்து 226 நாட்கள் வாழ்ந்துள்ளது என கூறப்படுகிறது.
இதற்கு முன் கடந்த1939 ஆம் ஆண்டு ஆவுஸ்ரேலியாவில் நாய் ஒன்று 29 வருடங்கள் வாழ்ந்து உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள நிலையில், தற்போது போபி அந்த நாயின் சாதனையை முறியடித்துள்ளது. (R)
