புத்தளம் நிருபர்
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம் 24 ஆம் திகதி சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஆசிரியர் முஹம்மட் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும், கல்வி அமைச்சின் புத்தளம் மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளின் இணைப்பாளருமான அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பாடசாலை நலன் விரும்பிகள், பெற்றோர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் நான்கு இல்லங்கள் பங்கு பற்றியதுடன், நூர் இல்லம் 364 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், ஹிரா இல்லம் 312 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , மர்வா இல்லம் 281 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும், சபா இல்லம் 242 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
வெற்றி பெற்ற இல்லங்களுக்கும், மாணவர்களுக்கும் அதிதிகளால் வெற்றிக்கின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









