ரயில் விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழப்பு


கொழும்பு 30

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த  ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் புகையிரத விபத்தொன்றில் இன்று (30) உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஊடகவியலாளரின் NDV View எனும் யூடியூப் சனலுக்காக வீடியோ பதிவு செய்யும் நோக்கில் மேற்கொண்ட பயணத்தின் போதே இவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த குறித்த ஊடகவியலாளரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post