வடமேல் மாகாண அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கல்




வடமேல் மாகாணத்தில் உள்ள இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைகளும், மாணவர்களுக்கான துணை நூல்களும் வழங்கும் நிகழ்வும் புத்தளம் இந்து மஹா சபையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது புத்தளம் மற்றும்  குருநாகல் ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்ந்த 44 அறநெறிப்பாடசாலைகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சீருடைகளும், மாணவர்களுக்கான துணை நூல்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறி பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் கேமலோசனி குமரனின் தலைமையில், புத்தளம் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்ததர் ர.விமலரஞ்சினியின்  ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
 
புத்தளம் இந்து மகாசபையின் தலைவர் மா.நாகராஜா , செயலாளர் இ.சிவநேசன் ,புத்தளம் மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி  ஒன்றிய தொண்டர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிப்பித்திருந்தனர்.

- புத்தளம் நிருபர் -

Post a Comment

Previous Post Next Post