பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாஸீத் பதவியேற்பு!

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாஸீத் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று பதவியேற்றார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இவர் நியமிக்கப்பட்டு கடந்த தினம் வர்த்தமானியில் இவரது  பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.

மொஹமட் சாலி நழீம் ஏறாவூர் நகரசபையின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post