புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து; 21 பேர் காயம்!


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (04) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பில் இருந்து பருத்தித்துறையை நோக்கிப் பயணம் செய்த குறித்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரமொன்றில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்து காரணமாக, சிலாபம் - புத்தளம் வீதியில் போக்குவரத்தும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post