ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான M.L.A.M. ஹிஸ்புல்லாஹ்வுக்கும், புத்தளம் கல்வியியலாளர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (11) புத்தளத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வேட்பாளரும், முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான ரணீஸ் பதூர்தீன் அவர்களின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதிபர் ஜே.எம் இல்ஹாம் அவர்களின் தலைமையில், புத்தளம் கல்வியியலாளர்கள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும், மு.காவின் உயர்பீட உறுப்பினர்களான ஜௌபர் மரைக்கார், ரிழ்வான் மரைக்கார் , புத்தளம் மாநகர சபை தலைமை வேட்பாளர் ரணீஸ் பதுர்தீன், மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நஸ்ஹத் மரைக்கார் உட்பட முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![]() |
| Paid Add |
இதன்போது, புத்தளம் நகரில் கல்வியல் கல்லூரி ஒன்றை அமைப்பதன் அவசியம் பற்றி பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்திய புத்தளம் கல்வியியலாளர்கள், புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர கட்டிடம் பெற்றுக் கொள்வது சம்மந்தமாகவும், திறந்த பல்கலைக்கழத்தில் புதிய பயிற்சி நெறிகளை உள்வாங்குவது சம்மந்தமாகவும் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.
இதன்போது புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்திற்கு தேவையான சகல மேலதிக நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், புத்தளம் நகரில் கல்வியல் கல்லூரி ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் தான் முன்னெடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் இங்கு உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
- ஊடகப்பிரிவு-
தேர்தல் விளம்பரங்கள் (Paid Add)


.jpg)






