இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம்  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி  காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகி, உரிய வாக்குமூலம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் விளம்பரங்கள்

Paid Add

Paid Add

Paid Add


Post a Comment

Previous Post Next Post