பைஸல் ஆசிரியரின் வெற்றியை அடுத்து புத்தளத்திலும், வெளிநாடுகளிலும் வெற்றிக்கொண்டாட்டம்!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக பைஸல் ஆசிரியர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, புத்தளத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மிகவும் அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

புத்தளம் மாவட்ட வரலாற்றில் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், பெரும்பான்மை கட்சி ஒன்றில் போட்டியிட்டு, 42939 விருப்பு வாக்குகளைப் பெற்று சிறுபான்மை மக்கள் சார்பில் பைஸல் ஆசிரியர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் ஆசிரியரின் ஆதரவாளர்கள் கேக் வெட்டியும், பாற்சோறு சமைத்து மக்களுக்கு வழங்கி மிகவும் அமைதியான முறையில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, பைஸல் ஆசிரியர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வாழும் அவரது  ஆதரவாளர்களும் அங்கு தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post