ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டி, அநுராதபுரத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இது நாமலின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டமாகும்.
மேலும், இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும், நாமலின் தந்தையுமான மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.