புத்தளத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழப்பு


சாஹிப் |

புத்தளம் - ஆனமடுவ, வேம்புவெவ மற்றும் வன்னாத்தவில்லு பழைய எலுவன்குளம் ஆகிய பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் உயிரழந்துள்ளதாக புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்  எரந்த கமகே தெரிவித்தார்.

வன்னாத்தவில்லு - பழைய எலுவன்குளம் பகுதியில் உயிரிழந்த சுமார் 28 வயது மதிக்கத்தக்க காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு , ஆனமடுவ - வேம்புவெவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்பக்கமாக யானைக்காக பொருத்தப்பட்ட மின் வேலியில் சிக்கி 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு யானைகளும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், ஆனமடுவ பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post