ரஸ்மின்
புத்தளம் - கரைத்தீவு பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட ஜாமிஉல் இல்ம் மஸ்ஜித் இன்று (15) மக்களின் பாவனைக்காக வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதயாக கலந்து கொண்டு குறித்த மஸ்ஜிதை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் கற்பிட்டி இணைப்பாளர் யூ.எம். ஜின்னா, வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மும்மத சமயத் தலைவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த மஸ்ஜிதின் மலசல கூட கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தனது சொந்த நிதியிலிருந்து 75 ஆயிரம் ரூபாவை நன்கொடையாக மஸ்ஜித் நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் உட்பட மும்மத சமயத் தலைவர்கள் உரையாற்றியதுடன், இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.