றிசாத் ஏ காதர்
பாடசாலையின் அபிவிருத்தி செயற்றிட்டங்கள், இதர நடவடிக்கைகளை இணைய உலகுக்கு ஏற்றால்போல் வடிவமைப்பது இன்று சவால் நிறைந்த ஒன்றாக மாறிப்போயுள்ளது.
அந்த வகையில் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலய அதிபர் மடிகணிணியின் தேவையின் அவசியம் கருதி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திடம் கோரியிருந்தார்.
குறித்த கோரிக்கையினை கருத்திற்கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், அரசினர் ஆண்கள் வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளருமான டொக்டர் ரஜாப் தனது சொந்த நிதியினூடாக குறித்த பாடசாலைக்கு மடிக் கணினி ஒன்றை வழங்கியுள்ளார்.
இவ்வாறு பெற்றுக்கொடுத்த மடிக் கணினியை பாடசாலை அதிபர் ஐ.எல்.சாஜித்திடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது சங்கத்தின் உறுப்பினரும், எம்.ஜே.எஸ்.குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஐ.எம்.ஜரீன் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் கோரிக்கைகளை செவிசாய்த்து இவ்வாறான உதவி, ஒத்தாசைகளை வழங்கும் இப் பழைய மாணவர் சங்கத்திற்கு பாடாசலை சமூகத்தினர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.