இலங்கையின் உறுப்புரிமையை நீக்கியது ICC !

இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

ஐசிசியின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் தனது கடமைகளை கடுமையாக மீறுவதாக இன்று (10) ஐசிசி சபை கூடி தீர்மானித்துள்ளது.

விசேடமாக, இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தல் தீர்மானத்தை மாற்றுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடு இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post