பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சட்ட இளமானி பட்டத்தை பெற்றுக் கொண்டார்

ரஸீன் ரஸ்மின்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சட்ட இளமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

IDM  Nations Campus இன் 2023 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா இன்று (11) கொழும்பு BMICH இல் இடம்பெற்றது. 

இதன்போதே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சட்ட இளமாணி கற்கையை BUCKINGHAMSHIRE NEW UNIVERSITY யில் நிறைவு செய்து சட்ட இளமாணிப்பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

கொழும்பு சாஹிரா தேசியக் கல்லூரியில் உயர் தரத்தை கற்றதுடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர், ஒரு பொறியியல் பட்டதாரியாவார்.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு முதற் தடவையான பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான ரிஷாத் பதியுதீன், பின்னர் 2004, 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராகவும், கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சராகவும் பொறுப்புக்களை ஏற்று இன, மத வேறுபாடின்றி மக்களுக்காக பல பணிகளையும் முன்னெடுத்திருந்தார்.

மன்னார் - தாராபுரத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர், அப்துர் ரஹ்மான் பதியுதீன் - கலீமத்தும்மா ஆகியோரின் சிரேஷ்ட புதவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post