கடையாமோட்டை மத்திய கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணிக்கு Jersey வழங்கி வைப்பு

புத்தளம் - கடையாமோட்டை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் உதைப் பந்தாட்ட அணி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் இறுதிப்  போட்டிக்குச் செல்கின்றனர். 

பாடாசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வணியினருக்கு சுமார் 53,000 ரூபா பெறுமதியான மேலங்கிகளை (ஜேசி) PALAVI TRANSPORT உரிமையாளரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கடையாமோட்டை இணைப்பாளருமான அப்துல்  நிஸார் அன்பளிப்பு  செய்தார்.

குறித்த மேலங்கிகளை பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் பாரூக் முஹம்மது ராபி மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் செயற்குழு உறுப்பினர் தாசிம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post